Thagadoor Munnetram TV
மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.




*** மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ***
tiruvannamalai images
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

திருவண்ணாமலை மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்
(M) 9894973545

திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்!

...

tiruvannamalai District map

வரலாறு

தொல்பழங்காலம் தமிழ்நாட்டின் முக்கிய மலைத்தொடர்களில் ஒன்றான கிழக்குத் தொடர்ச்சி மலைதொடரில் கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப்பகுதியின் கிழக்குப்பகுதியில் தென்வடக்காக நீண்ட பரப்பில் அமைந்துள்ளது திருவண்ணாமலை மாவட்டம். இம்மாவட்டத்தில் தென்பெண்ணையாறு, செய்யாறு, கமண்டலநாகநதி, மற்றும் பாலாறு ஆற்றுப்பகுதிகளில் பல அரிய தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள பில்லாந்தாங்கல் கிராமத்திலிருந்து பாலாற்றுக்கு செல்லும் கால்வாய் அருகே அண்மையில் பழங்கற்காலத்தைச் சார்ந்த வெட்டுக்கருவிகள், கைக்கோடரிகள், கத்திகள், சுரண்டிகள் போன்ற கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தின் ஜவ்வாதுமலைத்தொடரில் அமைந்துள்ள பல பாதிரி, கீழானூர் ஆகிய கிராமங்களில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, மனிதன் நாடோடி வாழ்க்கையிலிருந்து வேளாண்மை செய்யத் தொடங்கிய காலமான புதிய கற்காலத்தைச் (Neolithic period tools) சேர்ந்த கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தண்டராம்பட்டு வட்டம் தானிப்பாடி அருகே உள்ள மோட்டூரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இங்குள்ள கல்வெட்டுகளில் ஒன்றில் தாய்த் தெய்வக் கல் என்றழைக்கப்படுகின்ற மனித உருவமுடைய பெரிய கற்பலகை (Anthropomorphology figure) காணப்படுகிறது. தலை அற்ற மனித உருவத்தைப்போல் அமைந்த இக்கல் இம்மாவட்டத்தின் முக்கிய தொல்லியல் ஆதாரமாக திகழ்கின்றது. ஜவ்வாது மலையில் உள்ள கீழ்சிப்பிலி, மேல்சிப்பிலி என்ற இடத்தில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த கல்திட்டைகள் (Dolmens) காணப்படுகின்றன. இவை வாலியர் குகை என்றும் குள்ளர் குகை என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் வீரணம், தானகவுண்டன்புதூர், சம்பந்தனூர், தொண்டமானூர் போன்ற இடங்களில் பெருங்கால நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முகலாயர்கள் காலத்தில் பல போர்களும் கலகங்களும் இப்பகுதியில் ஏற்பட்டன. முகலாயர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் கி.பி. 1693 இல் நடைபெற்ற தேசூர் போர், கி.பி. 1696 நடைபெற்ற ஆரணி போரும் முக்கியத்துவம் வாய்ந்தன. நாயக்கர்கள் ஆட்சிக்காலத்திலேயே ஆங்கிலேயர்களின் ஆட்சியும் மெல்ல மெல்ல பரவிவந்தது. இக்காலகட்டத்திலும் பல போர்கள் நடைபெற்றுள்ளன. பீஜப்பூர் சுல்தானின் படையெடுப்பு, மராட்டியர்கள் படையெடுப்பு ஆகியவற்றின் தடங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கர்னாடகப்போரிலும் மைசூர் போரிலும் ஒரு பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 1751 ராபர்ட் கிளைவ் தலைமையில் ஆரணியில் போர் நடைபெற்றது. கர்னாடகப்போரின் ஒரு பகுதியான வந்தவாசி போர் கிபி. 1760 இல் வந்தவாசியில் நடைபெற்றது. இப்போரில் பிரன்ஞ் தளபதி கவுண்டி லாலியை ஆங்கிலேய தளபதி சர் அயர்கூட் வென்றார். இப்போர் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியை உறுதியாக நிலைநிறுத்த உதவியது. மைசூர் போரின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மலையிலும் செங்கம் கணவாயில் ஹைதர் அலிக்கும் ஆங்கிலப் படைகளுக்கும் இடையில் போர் நடைபெற்றது. ஆற்காடு நவாப் ஆண்ட பகுதிகள் 1800 வாக்கில் கிழக்கிந்திய கம்பெனியின் வசமானது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை உருவாக்கினர். அவ்வாறு 1801 ஆண்டு வடஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்கள் உருவாகின. பிறகு பல முறை மாவட்ட எல்லைகள், வட்ட எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு 1911 ஆண்டு வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டும், தென்னார்காடு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை வட்டத்தை பிரித்தும் வடஆற்காடு மாவட்டத்துடன் இணைத்தும் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டன. விடுதலைக்குப்பிறகு அதன்பிறகு 1989 ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வடஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என புதிய மாவட்டம் உருவாகியது. இம்மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தாவசி என 6 வட்டங்கள் இருந்தன. 1997 சம்புவராயர் என்ற பெயர் மாற்றப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விடுதலைக்குப்பிறகு கல்வி, மருத்துவம் மற்றும் இதர அரசு சேவைகள் வளர்ந்துவந்தன. தற்போது திருவண்ணாமலையில் அரசு மருத்துவக்கல்லூரி, ஆரணியில் அரசு பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை, செய்யார், தென்னாங்கூரில் அரசு கலைக்கல்லூரி, காரப்பட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் வேளாண்மை, பட்டு நெசவு முக்கிய வாழ்வாதாரமாகும். இவைதவிர சிறு தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும், செய்யார் சிப்காட் தொழிற்போட்டையில் தோல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அமைந்து இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்கின்றன. இம்மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களும், பண்டைய கால கோட்டைகள், அருணகிரிநாதர், அப்பைய தீட்சிதர், சைவ எல்லப்ப நாவலர் உள்ளிட்ட ஆன்றோர்களும் சமண சமய ஆன்றோர்களும் அவதரித்த புண்ணிய பூமியாகும். தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத்தனூர் அணை, செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட குப்பநத்தம் அணை, மிருகண்டாநதி நீர்த்தேக்கம், செண்பகத்தோப்பு அணை ஆகியவை இம்மாவட்டத்தில் வளம் சேர்த்து வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் 6188 ச.கி.மீ. பரப்பும் 24,64,875 மக்கள் தொகையும் கொண்ட தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 வருவாய் கோட்டங்களும் புதியதாக உருவாக்கப்பட்ட தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூர், ஜமுனாமரத்தூர் வட்டங்கள் உள்ளடக்கிய 12 வட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் - வட்டங்கள் (Taluks)