Thagadoor Munnetram TV
மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.




*** மகிழ்ச்சியாக இருப்பது - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ***
salem images
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

சேலம் மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்
(M) 9894973545

சேலம் மாவட்ட செய்திகள்!

...

salem District map

வரலாறு

சேலம் மாவட்டத்தில் மனித நாகரீகத்தின் தோற்றம் கற்காலத்திற்கு மிகவும் முந்தய காலத்திலேயே துவங்கியிருக்கிறது. புதிய மற்றும் பழைய கற்காலத்திற்குரிய கற்கலால் ஆன கருவிகள் மற்றும் விலங்கு சாணங்களின் சாம்பல் குவியல்கள் இந்த மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் வரலாற்றுக்கு முந்தய கலாச்சாரம் இருந்ததாக அறியப்படுகிறது. கால அடிப்படையிலான சேலம் மாவட்ட வரலாறு பின்வருமாறு. பொது சகாப்தத்திற்கு முன்பு BCE (before common era) கி.மு3-ஆம் நூற்றாண்டு. தமிழ் சித்தர் – போகர் அவர்களின் காலம், புத்த, ஜைன மதங்கள் தொடக்கம் பொது சகாப்தம்Common Era(CE) கி.பி முதலாம் நூற்றாண்டு கி.பி(37-68) ரோம சக்கரவர்த்தி TibericsClaudices Neroஅவர்கள் காலத்திய வெள்ளி காசுகள் சேலம் மாவட்டம் கோனேரிபட்டியில் 1987 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேலத்தில், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்ட சமுதாயம் இருந்ததை அறிய முடிகிறது. கி.பி 2ஆம் நூற்றாண்டு பாண்டிய வம்சத்தின் ஆட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் கனைக்கால் இரும்பொறை கொள்ளி மலை பகுதியை ஆண்டார். கி.பி 4ஆம் நூற்றாண்டு பல்லவ வம்ச ஆட்சி தொடக்கம் கி.பி 6ஆம் நூற்றாண்டு மகேந்திரவர்ம பல்லவரின் காலம் சைவசமய கொள்கைகள் மேலோங்கியது. கி.பி 7ஆம் நூற்றாண்டு நரசிம்மவர்ம பல்லவரின் காலம். புத்த, ஜைன மதங்கள் நசிய தொடங்கியது. கி.பி 8ஆம் நூற்றாண்டு பாண்டிய வம்ச ஆட்சி காலம் கி.பி 9ஆம் நூற்றாண்டு சைவ சமயம் பரவி புத்த ஜைன மதங்கள் முடிவுற்றது. பல்லவர்களின் ஆட்சி தொடக்கம். கி.பி 10ஆம் நூற்றாண்டு பல்லவ ஆட்சி முடிவுற்று சோழ வம்சம் தொடக்கம். கி.பி 11ஆம் நூற்றாண்டு சோழர்கள் ஆட்சி. கி.பி 12ஆம் நூற்றாண்டு சேலத்தின் ஒரு பகுதியில் ஹொய்சாலர்கள் ஆட்சி தொடக்கம். கி.பி 13ஆம் நூற்றாண்டு ஹொய்சாலர்கள் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. சில பகுதியில் மட்டும் பாண்டியர் ஆட்சி நீடிப்பு. கி.பி 14ஆம் நூற்றாண்டு 1310 ல் மாலிக்கபூர் சேலம் வழியாக சென்றார். 1368- சேலம் விஜயநகர பேரரசர் ஆளுகையின் கீழ். கி.பி 15ஆம் நூற்றாண்டு சாலுக்கியர்களின் ஆட்சி பாளையக்காரகள் ஆட்சி தொடக்கம் கி.பி 16ஆம் நூற்றாண்டு மதுரை திருமலை நாயக்கரின் ஆட்சி ஆத்தூர் உட்பட சேலத்தின் ஒரு பகுதி பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி. கி.பி 17ஆம் நூற்றாண்டு நாயக்கர், பாளையக்கார்கள் ஆட்சி உள்ளூர் தலைவர் கட்டி முதலியின் ஆட்சி கி.பி 18ஆம் நூற்றாண்டு ஹைதர் அலி , திப்பு சுல்தான் ஆட்சி பிரிட்டீஷ்காரர்களின் ஆட்சிக்கு உட்படல் 1772 – சேலத்திற்கு முதல் பிரிட்டீஷ் ஆட்சியர் கி.பி 19ஆம் நூற்றாண்டு 1856 நில அளவை மேற்கொள்ளப்பட்டு நிலவரித்திட்டம் ஏற்படுத்தப்பட்டது கிழக்கிந்திய கம்பெணியின் ஆட்சி முடிவுக்கு வந்து பிரிட்டீஷ் மகாராணியின் ஆளுகைக்குட்பட்டது 1860 மாவட்டத்தலைநகராக சேலம் ஆக்கப்பட்டது 1862 சேலம் மத்திய சிறைச்சாலை கட்டப்பட்டது 1866-67 கடுமையான பஞ்சம் மற்றும் கொள்ளை நோயால் தாக்கப்பட்டது 1875 கொள்ளை நோய் காலராவால் தாக்கப்பட்டது 1876-78 பெரும் பஞ்சம் 1891-92 மற்றுமொரு பஞ்சம் 1896-97 நூற்றாண்டின் கடைசி பஞ்சம் 20ஆம் நூற்றாண்டு: இருப்பு பாதை, ஏற்காடு மலைபாதை, மேட்டூர் அணை போன்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1947 – சேலம் சுதந்திர இந்தயாவின் ஒரு பகுதியானது.

சேலம் மாவட்டம் - வட்டங்கள் (Taluks)